செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:58 IST)

இசை நம்மை ஒன்றிணைக்கும்; இளையராஜாவுடன் மோடி, அம்பேத்கர்! – வைரலாகும் போஸ்டர்!

ilaiyaraja
சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய நிலையில் அதற்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இளையராஜாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பாஜகவினர் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசி வந்தனர்.

இந்த சர்ச்சை குறித்து பேசிய இளையராஜா, தான் தன் மனதில் பட்டதை பேசியுள்ளதாகவும், அதை திரும்ப பெறப்போவதில்லை என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
Illaiyaraja Poster

இந்நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது வைரலாகியுள்ளது. அதில் ”மதம், சாதி, மொழி கடந்து இசை நம்மை ஒன்றிணைக்கும் இசைஞானி இளையராஜாவும் கூட” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது.