1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:43 IST)

ரயில் தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுத்தால் அபராதம்: ரயில்வேதுறை அறிவிப்பு

train track
ரயில் தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுத்தால் அபராதம்: ரயில்வேதுறை அறிவிப்பு
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறை அதிரடியாக அறிவித்துள்ளது
 
ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதன் காரணமாக பல விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பில்லா உயிர் பலி ஆகி வருகிறது என்பது தொடர்கதையாகிறது
 
இந்த நிலையில் ரயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
 
அதுமட்டுமின்றி ரயிலின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தால் ரூபாய் 500 அபராதம் என்றும் அல்லது 3 மாதம் சிறை தண்டனை என்றும் பயணிகளுக்கு சென்னை கோட்ட ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்துள்ளது