திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (17:05 IST)

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் !

சென்னை மாநகரத்தில் சாலையில் வாகன விதிமீறல்களில் ஈடுபடும்வோருக்கு அபராதம் விதிக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது என்று  சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளதாவது :
சிலர் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறையினரை மிரட்டி வருகின்றதாகவும் அவற்றைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அபராத ரசீதை வாகன உரிமையாளரிடம் கொடுக்காமல் வாகனத்தில் ஒட்டிச் செல்லும் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சாலையில் ஒரு காரில் எம்.எல்.ஏ மகன் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட போட்டோ வைரல் ஆனது.