பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய’ தல ’தோனி...
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆகஸ்டு 15 அன்று அவரது முடிவை அவர் அறிவித்த நிலையில் அவரது கிரிக்கெட் பயணத்தை வாழ்த்தி பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தோனிக்கு ஃபேர்வெல் ஆட்டம் நடத்துவது குறித்து பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில் தோனி கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத சக்தி என புகழ்ந்துள்ளார். மேலும் தோனியின் திடீர் ஓய்வு தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறிய அவர் தோனி ஓய்வு அறிவித்ததால் இந்தியாவின் 130 கோடி மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பதிலளித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி
எந்த ஒரு கலைஞராக இருந்தாலும் ராணுவ வீரராக இருந்தாலும் விளையாட்டு வீரராக இருந்தாலும் தங்களது கடினமான உழைப்பு மற்றும் தியாகம் ஆகியவை மற்றவர்களால் போற்றப்படவேண்டுமென விரும்புவார்கள், அதுபோன் எனக்கு உங்களது பாராட்டுகள் அமைந்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என தனக்கே உரிய பாணியில் தெரிவித்துள்ளார்.