1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pazha Nedumaran hospitalized

பழ நெடுமாறன் மருத்துவமனையில் அனுமதி!

பழ நெடுமாறன்
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 87 வயதாகும் அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததாக முதல் கட்ட பரிசோதனையில் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு கொரோனா நோய் உள்ளதா என்பது இன்னும் சில மணி நேரத்தில் பரிசோதனையின் முடிவில் தெரியவரும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
பழ நெடுமாறன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
பிளிப்கார்ட் அலுவலகத்திற்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய கும்பல்!