ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (15:10 IST)

ஆளுனர் பேசாமல் இருப்பதே நல்லது: பழ.நெடுமாறன்

Nedumaran
ஆளுநர் பேசாமல் இருப்பது அவருக்கு நல்லதே என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழநெடுமாறன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சமீபத்தில் திருக்குறளுக்கு ஜியூ போப் எழுதிய உரை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.  இந்த கருத்திற்கு தமிழறிஞர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
தமிழ் இலக்கியம் தமிழர் பண்பாடு குறித்து தனது அறியாமையை வெளிப்படுத்துவதை விட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசாமல் இருப்பது நல்லது என்பதை உணர வேண்டும் என தேசிய முன்னணி தலைவர் பழநெடுமாறன் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே மதுரை எம்பி வெங்கடேசன் ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது பல நெடுமாறனும் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது