திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (15:37 IST)

திருக்குறளின் ஆன்மாவை கெடுத்த மிஷனரி ஜி.யு.போப்!? – ஆளுனர் ஆர்.என்.ரவி விமர்சனம்!

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து பேசிய ஆளுனர் ஆர்.என்.ரவி திருக்குறளை ஜி.யு.போப் மொழிபெயர்த்த விதம் குறித்து விமர்சித்துள்ளார்.

டெல்லி லோதி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள தமிழ் கல்விக்கழகம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தி திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தரை அடி உயரமும், 1500 கிலோ எடையும் கொண்ட இந்த சிலையை தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர் “திருவள்ளுவர் உள் ஒளி மிக்க ஆன்மீகவாதி. அவரது திருக்குறளின் முதல் குறளே ஆதிபகவன் பற்றி எழுதியிருக்கிறார். இந்த உலத்தை ஆதிபகவன்தான் படைத்தார். அதைத்தான் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு.போப் அதில் உள்ள ஆன்மிக சிந்தனைகளை நீக்கிவிட்டார். மிஷனரியாக இந்தியாவிற்கு வந்த ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.