ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2023 (09:57 IST)

பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரையாத விநாயகர் சிலைகள்.. மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

தமிழகம் முழுவதும் சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று சென்னையில் ஒரு சில பகுதிகளில் விநாயகர் சிலைகளை கலைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 
 
பட்டினப்பாக்கம் கடற்கரை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் நேற்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் தற்போது இதில் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. நேற்று விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்ட நிலையில் கரையாத விநாயகர் சிலைகளால் குப்பை மேடாக பட்டினப்பாக்கம் கடற்கரை காட்சியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து தக வல் கிடைத்தவுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறார். மேலும் கரையாத சிலைகளை அகற்றுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva