வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (20:05 IST)

இன்று முதல் மீண்டும் பொங்கல் சிறப்பு பேருந்துகள்: தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் கடந்த 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை சென்னையில் இருந்து இயக்கப்பட்டன. இதில் சுமார் 9 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் வெளியூர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக அனைத்து முக்கிய நகரங்களிலும் இன்று மாலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை வந்திறங்கும் பயணிகளின் வசதிக்கு ஏற்ப கோயம்பேடு, பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல மாநகர பஸ்கள் இயக்கப்படவிருப்பதாகவும் குறிப்பாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் மாநகர பஸ்கள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
 
இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் வரும் சனி, ஞாயிறு அன்றுதான் அதிகளவில் பயணிகள் சென்னைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிறு அன்று அதிகளவு கூட்டம் இருக்கும் என்பதால் சனிக்கிழமை இரவே சொந்த ஊரில் இருந்து பலர் கிளம்ப திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது