நள்ளிரவில் தேநீர் வழங்கும் திட்டம்! – விபத்துகளை தடுக்க புதிய ஐடியா!
பொங்கலை முன்னிட்டு அதிகமான பேருந்துகள், வாகனங்கள் இயக்கப்படும் நிலையில் ஓட்டுநர்கள் தூங்காமல் இருக்க நள்ளிரவில் தேநீர் வழங்கும் திட்டத்தை போக்குவரத்து துறை செயல்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகை நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மக்கள் பலர் அரசு சிறப்பு பேருந்துகளிலும், தனியார் பேருந்து மற்றும் மற்ற வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். பழனி பாதயாத்திரை செல்வோர், ஐயப்ப தரிசனத்திற்கு செல்வோர் என இந்த மாதம் முழுவதிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் எண்ணற்ற வாகனங்கள் பயணித்து வருகின்றன.
இரவு நேரங்களில் ஓட்டுனர்கள் கண் அயர்வதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே நள்ளிரவு ஒரு மணி முதல் 5 மணி வரை அவ்வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி அந்த டிரைவர்களுக்கு தேநீர், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கியிருக்கிறது போக்குவரத்து துறை.
விபத்தை தவிர்க்கும் விதமாக போக்குவரத்து துறை மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சியை பொதுமக்களும், டிரைவர்களும் வரவேற்றுள்ளனர்.