ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (16:03 IST)

மாநகரப் பேருந்தில் பயணம் செய்து திருச்சி விமான நிலையம் சென்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் விமான நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் எதிர்புறத்தில் உள்ள வயர்லெஸ் ரோடு  பேருந்து நிறுத்தத்தில் இருந்து  பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  இன்று காலை பயணம் செய்தார்.
 
இந்நிகழ்வில்  மண்டல குழு தலைவர் மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் தர்மராஜ் மணிவேல் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன்  மற்றும் ,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் 
ஆ. முத்துகிருஷ்ணன், துணை மேலாளர்  புகழேந்தி ராஜ், துணை மேலாளர் சாமிநாதன், உதவி மேலாளர்  ராஜேந்திரன், மற்றும் பயணிகள் உடன் இருந்தனர்.