1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Moderate to Heavy Rain Expected Today in 24 Districts of Tamil Nadu: Weather Department Warning

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

Tamil Nadu weather
இன்று காலை 10 மணி வரை, தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
ஒரு பக்கம் கோடை வெயில் கொளுத்திக்கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில்  பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில், இன்று தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதேபோல்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேற்கண்ட 24 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!