1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (14:57 IST)

ஆகஸ்ட் 23ஆம் தேதி மநீம செயற்குழு கூட்டம்: விஜய் கொடி அறிமுகம் செய்யும் அடுத்த நாளில் ஏன்?

Makkal Needhi Maiam
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 23ஆம் தேதி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் என்பவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. வரும் 23-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மநீம கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது, விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது குறித்த அறிவுறுத்தல்களை கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுக்கு  வழங்கவிருக்கிறார்" என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran