திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜூலை 2024 (20:08 IST)

தமிழினத்தை கொன்று குவித்த சிங்களன் கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதா? பாரிசாலன்..!

தமிழினத்தை துடிக்க துடிக்க கொன்ற சிங்கள ராணுவ அணியின் கிரிக்கெட் பிரிவில் பணியாற்றிய "மதீச பத்திரன" என்ற நபர் தமிழக கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதா? என பாரிசாலன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தமிழினத்தை துடிக்க துடிக்க கொன்ற சிங்கள ராணுவ அணியின் கிரிக்கெட் பிரிவில் பணியாற்றிய "மதீச பத்திரன" என்ற நபர் தமிழகத்தில் ஒரு தனியார் நிறுவன கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்! 
 
ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களை படுகொலை செய்த, ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத இனப்படுகொலை ராணுவத்தை மறைமுகமாக கௌரவிக்கும் நிகழ்வு இது! 
 
தமிழகத்தில் தமிழ்த் தேசிய கட்சிகள், இயக்கங்கள் வலுவாக இல்லை என்பதால் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ச்சியாக திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
 
இத்தகைய நிகழ்வுகள் தொடராமல் இருக்க தமிழர்கள் கவனிப்போடு இருக்க வேண்டும். 
சிங்கள இலங்கை நாட்டு பிரதிநிதிகள் தமிழக விழாக்களில் கலந்து கொள்ளும் தகவல் தமிழர்களுக்கு தெரிந்தால் அதை உடனடியாக சமூக வலைதளங்களின் மூலம் தெரியப்படுத்துங்கள்! 
 
கடுமையான அறவழி எதிர்ப்பு போராட்டங்களின் மூலம் அவர்களின் வருகையையே தமிழ்த் தேசிய எழுச்சிக்கான விதையாக விதைப்போம்!
 
Edited by Siva