வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஜூலை 2024 (17:58 IST)

சென்னையில் சிக்கிய ரூ.70 கோடி மதிப்பு போதைப்பொருள்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி..!

சென்னையில் ரூபாய் 70 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில் சென்னையில் 70 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை பிடித்து விசாரணை செய்த போது தான் போதைப்பொருள் குறித்த தகவல் தெரிய வந்ததாகவும்,  செங்குன்றம் பகுதியை சேர்ந்த மன்சூர், இப்ராஹிம் ஆகிய இருவரையும் கைது செய்திருப்பதாகவும்  தகவல் வெளியாகி உள்ளன.
 
கிளாம்பாக்கத்தில் பிடிபட்ட நபர்களிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் செங்குன்றத்தில் சோதனை செய்தபோது 70 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறிய நிலையில் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான ஒருவரை பிடித்து அவர் மூலம் ரூபாய் 70 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருவதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதை பொருள் மொத்தம் 6.2 கிலோ இருந்ததாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்  இந்த போதைப்பொருட்களை சென்னையில் இருந்து ராமநாதபுரம் கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran