வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஜூலை 2024 (18:16 IST)

அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகடாவாக்கப்பட்டார் தமிழிசை.. கார்த்தி சிதம்பரம்..

அண்ணாமலையின் சித்து விளையாட்டால் தமிழிசை சௌந்தரராஜன் வழிகளாக்கப்பட்டார் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது தெலுங்கானா மாநிலத்தில் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனை அண்ணாமலை தனது சித்து விளையாட்டால் பலிகடா ஆக்கிவிட்டார். தற்போது மீண்டும் அவருக்கு ஆளுநர் பதவி கிடைக்காமல் இருந்ததற்காக நான் வருத்தப்படுகிறேன்.
 
யாரை அமைச்சராக்க வேண்டும், யாருக்கு பதவி உயர்வு தர வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பது முதலமைச்சருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம். முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம், யார வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
 
அது போல் தான் பிரதமருக்கு அந்த உரிமை இருக்கிறது, தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநர் பதவி கிடைக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தலுக்கு முன் ஒன்று கூறுகிறார், தேர்தலுக்குப் பின் ஒன்று கூறுகிறார், அவர் என்ன கூறுகிறார் என்பது எனக்கு சுத்தமாக புரியவில்லை’ என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
Edited by Mahendran