வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (22:43 IST)

படிக்காமல் டிவி பார்த்த சிறுவனுக்கு பெற்றோர் விநோத தண்டனை!

China
சீனாவில் படிக்காமல் டிவியை பார்த்த சிறுவனுக்கு பெற்றோர் வித்தியாசமான தண்டனை கொடுத்தனர்.
 

பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுவது வழக்கம்.  ஆனால், வீட்டிற்கு வந்து சிறுவர்கள் அதைச் செய்து முடிக்கிறார்களா? என்பதுதான் கேள்விக்குறி.
இதற்காகவே, சிறுவர்களை டியூசனுக்கும அனுப்பி வைப்பர். சிலர் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பர். இதைச் செய்யாத மாணவர்களை பெற்றோர் தண்டிப்பர். இதுதான் பொதுவாக  நடக்கும்.

சீனாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது, வீட்டில் வீட்டுப் பாடம் செய்யாமல் டிவி ஒ பார்த்த சிறுவனுக்கு இரவு முழுவதும் டிவியை பார்க்க வேண்டும் என பெற்றோர் தண்டனை கொடுத்துள்ளனர்.

இதற்காக அதிகாலை வரை 5 மணிவரை சிறுவனை தூங்கவிடாமல் கவனித்தனர்., தூக்கம் வராமல் இருக்க தின்பண்டம் சாப்பிட்ட போதிலும், தனக்கு தூக்கம் வருவதாக சிறுவன் கதறினான்.

இந்த வித்தியாசமான தண்டனைக்கு விமர்சனங்கள் குவிந்தாலும் இனி சிறுவன் டிவி பார்க்கவே யோசிப்பான் என்று  நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Edited by Sinoj