மகனுக்கு போதையேற்றி கொடூரமாக கொலை செய்த பெற்றோர்

murder
Last Modified புதன், 26 செப்டம்பர் 2018 (08:07 IST)
மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி ஓவராக டார்ச்சர் செய்த மகனை அவரது பெற்றோரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு சிலம்பரசன் என்ற மகன் இருந்தான். சிலம்பரசன் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அவரது காதல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விவாகரத்து பெற்றார். பின் வேலையை விட்டும் நின்றுவிட்டார்.
 
இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிலம்பரன், பெற்றோரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். அவரது பெற்றோரும் இதனை தாங்கிக் கொண்டிருந்தனர்.
 
நாளுக்கு நாள் சிலம்பரசனின் தொல்லை அதிகரிக்கவே, அவனது பெற்றோர் மகனை கொல்ல திட்டமிட்டனர். அதன் படி தங்கள் மகனை மூக்கு முட்ட குடிக்க வைத்துவிட்டு,  ஒரு ஆட்டோ ஓட்டுநரின் துணையோடு கயிற்றால் மகனின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர்.
 
இதனையடுத்து போலீஸார் சிலம்பரசனின் பெற்றோரை கைது செய்தனர். அவரது பெற்றோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :