ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (20:23 IST)

முதல் பட சம்பளத்தை முதலமைச்சரிடம் கொடுத்த விக்ரம் மகன்

நடிகர் விக்ரம் மகன் துருவ், இயக்குனர் பாலா இயக்கி வரும் 'வர்மா' என்ற படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் கிடைத்த சம்பளம் முழுவதையும் நடிகர் துருவ் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து இன்று 'வர்மா' பட தயாரிப்பாளருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து முதல் பட சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக கொடுத்தார். துருவுக்கு கேரள முதல்வர் நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் ராதன் இசையில் உருவாகி வரும் 'துருவ்' படத்தின் அட்டகாசமான டீசர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.