ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 24 செப்டம்பர் 2018 (14:07 IST)

ஓரினச்சேர்க்கையின் போது ஏற்பட்ட தகராறு - கத்திகுத்து வாங்கிய வாலிபர்

மகாராஷ்டிராவில் ஓரினச்சேர்க்கையில் ஏற்பட்ட தகராறால்  23 வயது இளைஞர் 46 வயது நபரை கத்தியால் குத்தியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ராஜேஷ் வர்தாக்(46) என்ற நபர் 23 வயது இளைஞர் ஒருவருடன் அவ்வப்போது ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
 
நாளுக்கு நாள் ராஜேஷின் அட்டூழியங்கள் அதிகரித்துக்கொண்டே போனது. எப்பொழுதும் ராஜேஷ் அந்த இளைஞரிடம் ஓரினச் சேர்க்கைக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த இளைஞர் பயங்கர கடுப்பில் இருந்துள்ளார்.
 
நேற்றும் வழக்கம்போல் ராஜேஷ் அந்த இளைஞரை ஓரினச் சேர்க்கைக்கு கூப்பிட்டுள்ளார். இதற்கு அந்த இளைஞன் மறுத்துள்ளான். ஆனாலும் கேட்காத ராஜேஷ் தொடர்ந்து நச்சரித்துள்ளார். 
 
இதில் கோபம் தலைக்கேறிய அந்த இளைஞர் ராஜேஷை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜேஷிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.