திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (10:23 IST)

தொடர் மழை பெய்து விடுமுறை இல்லையா? சென்னை கலெக்டருக்கு குவியும் கண்டனங்கள்..!

சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்து வந்தது என்பதும் இன்று காலை விடிந்த பின்னரும் தற்போது வரை பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையிலும் பல மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 
கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகளின் குழந்தைகள் பள்ளிகளுக்கு காரில் செல்வார்கள். ஆனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பேருந்துகளிலும் ஆட்டோக்களிலும் தான் செல்லும் நிலையில் உள்ளனர். 
 
அவர்களது துன்பம் கலெக்டர் போன்ற உயர் பதவியில் உள்ளவர்களுக்கு தெரியாது என்றும்  விடிய விடிய மழை பெய்த நிலையில் எப்படி குழந்தைகள் பள்ளிக்கு செல்வார்கள் என்பதை யோசிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
 
மழை பெய்யும் தினத்தில் விடுமுறை அளித்து அதற்கு பதிலாக வேறொரு நாளில் பள்ளிகள் இயங்குவதற்கு உத்தரவிட்டால் என்ன குறைந்து விடப் போகிறது என்று கேள்வியையும் அவர்கள் எழுப்பி வருகின்றனர்.
 
Edited by Mahendran