வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (10:01 IST)

தொடர் மழை எதிரொலி..! புத்தக கண்காட்சி இன்று நடைபெறாது..!!

book fair
தொடர் மழை காரணமாக சென்னையில் நடைபெற்று வரும் 47வது புத்தகக் கண்காட்சி இன்று ஒருநாள் நடைபெறாது என்று பபாசி அறிவித்துள்ளது. 
 
47வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை ஆர்வமுடன் வங்கி செல்கின்றனர்
 
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் பெய்து வரும் திடீர் மழையால் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. வாகனங்களை நிறுத்தும் இடத்திலும், புத்தக காட்சியின் நுழைவாயில் அருகிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

babasi
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று (ஜன.08) ஒருநாள் சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறாது என்று தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) தெரிவித்துள்ளது. நாளை வழக்கம் போல புத்தகக் காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.