1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Paranur toll jams as e pass restrictions relaxed

சென்னையை மொய்க்கும் வெளியூர் ஆட்கள்: பரனூரில் நெரிசல்!!

Chennai
இ-பாஸ் தளர்வுகள் சென்னையின் நுழைவு வாயிலான பரனூரில் கூட்ட நெரிசலாக உள்ளதாக தகவல். 
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் நடைமுறை அமலில் இருந்த நிலையில் இன்று முதல் இபாஸ் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று அதிகாலை முதல் இபாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்பேரில் இபாஸ் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல உடனடியாக அனுமதி கிடைக்க தொடங்கியுள்ளது. 
 
அமலுக்கு வந்த இ-பாஸ் தளர்வுகள் சென்னையின் நுழைவு வாயிலான பரனூரில் கூட்ட நெரிசலாக உள்ளது. வாகனங்களில் சென்னைக்கு வரும் மற்றும் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
About Writer
Sugapriya Prakash