புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (15:17 IST)

ஏன் ஆண்கள் பெண்களுக்கு நிர்வாணப் படங்களை அனுப்புகிறார்கள்? ஆவேசமான செய்தி வாசிப்பாளர்!

தமிழ் ஊடகவியலாளர்களில் அதிக பாலோயர்ஸ்களைக் கொண்டுள்ளவரான பனிமலர் பன்னீர்செல்வம் ஆண்கள் சமூகவலைதளங்களில் பெண்களுக்கு நிர்வாணப் படங்களை அனுப்புவது குறித்து ஆவேசமாகப் பேசியுள்ளார்.

பெரியாரியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் மாடலான பனிமலர் பன்னீர் செல்வம் சமூக வலைதளத்தில் மிகவும் தீவிரமாக இயங்கி வருபவர். அவரது கருத்துகளுக்காக அவரை பல ஆயிரக்கணக்கானவர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். அதே போல அவரை விமர்சிப்பவர்கள் பலரும் அவரைப் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஆண்கள் தங்கள் நிர்வாணப் புகைப்படங்களை பெண்களுக்கு அனுப்புவது தொடர்பாக இன்று அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘ஆண்கள் நிர்வாணப் படம் அனுப்புவதன் உளவியலை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அதைப் பார்த்து மயங்கி உங்களிடம் பெண்கள் பேசுவார்கள் என நம்புகிறீர்கள் எனில் சாரி பிரதர்ஸ், எங்களுக்கு அருவருப்பைத் தவிர வேறொன்றும் ஏற்படப்போவதில்லை. இயல்பிலேயே ஆண்களின் உடல் பார்த்து மயக்கம் ஏற்படும்படி பெண்கள் உருவாக்கப்படவில்லை என படித்திருக்கிறேன்(விதிவிலக்குகள் இருக்கலாம்). உங்கள் உறுப்பு ஆண்மை இல்லை என்ற தெளிவு எங்களிடம் இருக்கிறது, அதைத்தாண்டி தன்னுடைய செயல்களால் பேராண்மை மிக்க ஆண்கள் பலரை தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம், அதில் எல்லோரிடமுமே நாங்கள் காதல் கொள்வதோ, கலவி கொள்வதோ இல்லை, அப்படி இருக்க நீங்கள் லிஸ்டிலேயே இல்லை. ஒழுக்கமும், நற்செயல்களுமே ஒருவரை ஈர்க்கும், அநாகரிகம் ஈர்க்காது.’ எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.