செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (13:25 IST)

க்ரவுண்ட் லெவலில் கலக்கும் உதயநிதி: ஓஹோனு புகழும் ஐடி விங்!!

திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் தனது இளைஞர் அணி நிர்வாகிகளுடன் இணைந்து பலருக்கு உதவி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
திமுக ஐடி விங் இவர்களது கள பணிகளை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தும் வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 1300 ஆட்டோ ஓட்டுநர்கள், 440 முடி திருத்தும் கலைஞர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது பகிரப்பட்டுள்ளது. 
 
இந்நிகழ்வில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர்-சைதை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் அவர்கள், கழக நாடாளுமன்ற குழு தலைவர்-திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள், கழக அமைப்பு செயலாளர்-மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.
 
இது மட்டுமின்றி, கொரோனா பேரிடரால் மத்திய - மாநில அரசு கள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுபவர் 9361863559 என்ற எண்ணுக்கு அழைத்தால் உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்து அதனை செம்மையாக நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.