முதல்வருக்கு ஒத்துழைப்பு வழங்க திமுக எம்பிக்கள் தயார் ! - ஸ்டாலின்

Sinoj| Last Modified புதன், 22 ஏப்ரல் 2020 (22:22 IST)

நிதி உரிமையை மீட்டெடுக்க முதல்வருக்கு ஒத்துழைப்பு வழங்க திமுக எம்பிக்கள் தயார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது :

மத்திய வரி வருவாய்க்கு அதிக பங்களிப்பு செய்கின்ற தமிழகத்திற்கு அதிக நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும்.

நிதிப்பகிர்வு அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது என்பதை
15 வது நிதிக்குழு நிலைநிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும்,
தமிழகம் உள்ளிட்ட தென்மாநில மக்களின் உணவுகளை மத்திய அரசு அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. போதிய நிதியை அளிக்கப்படாததை தட்டிக்கேட்க
அதிமுக அரசு முன்வரவில்லை. எனவே நிதிப்பங்கீட்டில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :