ஜப்பானில் உருவாகி உலக புகழ்பெற்ற அனிமெ தொடர்களான நருட்டோ, ஒன் பீஸ் போன்றவற்றை அனிமேஷன் செய்த அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமான சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பானில் உருவாக்கப்படும் அனிமே தொடர்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அவ்வாறாக உலக புகழ்பெற்ற அனிமே தொடர்களில் முன்னணியில் இருப்பவை நருட்டோ, ஒன் பீஸ் போன்ற தொடர்கள். இந்த அனிமே தொடர்களுக்கு அனிமேஷன் இயக்குனராக பணியாற்றியவர் ஷிகேகி அவாய். இது தவிர One Punch Man, Food War உள்ளிட்ட அனிமேக்களையும் அவர் இயக்கியுள்ளார்.
71 வயதான ஷிகேகி அவாய் உடல்நலக் குறைவால் காலமானார். இந்த செய்தி அனிமே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்கள் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K