காதல் திருமணத்தால் மிரட்டால்.. மாலை மாற்றிய கையோடு போலீசில் தஞ்சமடைந்த மணமக்கள்..!
காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகள், தங்கள் வீட்டாரிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறி போலீசில் தஞ்சம் அடைந்திருக்கும் சம்பவம், திருவண்ணாமலை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை தலையாம்பள்ளம் என்ற பகுதியைச் சேர்ந்த மணிமாறன், அதே பகுதியைச் சேர்ந்த பூர்ணிமாவை கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வந்தார். பூர்ணிமா வீட்டார் இவர்களின் காதலை எதிர்த்தனர். இதனால், அவர்கள் கடலூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், அவர்கள் திருமணத்தை பதிவு துறையிலும் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்து, புதுமண தம்பதிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“நான் கடந்த 24 வருடங்களாக சமூக சேவை செய்து வருகிறேன். தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளேன். பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். ஆனால், என் மனைவி பூர்ணிமாவின் குடும்பத்தினரிடமிருந்து தொடர்ந்து மிரட்டல் வருவதால், எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது,” என்று மணிமாறன் காவல் துறையில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ள நிலையில், போலீசார் மணமகளின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva