சடுகுடு ஆடும் எடப்பாடி : அதிருப்தியில் மாஃபா பண்டியராஜன்

Last Modified வியாழன், 22 பிப்ரவரி 2018 (10:20 IST)
துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆதரவாளரான அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாக்குறுதி கொடுத்த துறைகளை கொடுக்காமல் இழுத்தடிப்பதால், அவர் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
சசிகலா குடும்பத்திற்கு எதிராக ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது, மாஃபா பாண்டியராஜன் அவரின் அணியில் இணைந்தார். இதனால், அவரின் கல்வி அமைச்சர் பதவி பறிபோனது. அந்த பதவியை செங்கோட்டையனுக்கு கொடுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
 
அதன்பின் இரு அணிகளும் இனைந்த பின், ஓ.பி.எஸ்-ற்கு துணை முதல்வர் பதவி, மாஃபா பாண்டியராஜனுக்கு நிர்வாகத்துறை, தொல்லியல்துறை, ஜி.எஸ்.டி கவுன்சில் போன்றவற்றை கொடுப்பதாக எடப்பாடி வாக்குறுதி அளித்தார். ஆனால், அவருக்கு வெறும் தமிழ் வளர்ச்சித்துறை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
 
இதுபற்றி பாண்டியராஜன் கேட்கும் போதெல்லாம், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தட்டிக் கழிக்கிறாராம் முதல்வர். இதனால், மாஃபா பாண்டியராஜனும் அவரின் ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :