திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (08:22 IST)

பாடத்திட்டம், பணி பதிவேடுகளை பராமரிக்க அவசியமில்லை! – பள்ளிக்கல்வித்துறை!

Pallikalvi thurai
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களின் பணியை குறைக்கும் விதமாக பாடத்திட்டம், பணி பதிவேடுகள் உள்ளிட்டவற்றை பராமரிக்க அவசியமில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது மட்டுமன்றி வருகை பதிவு, பாடத்திட்டம், பணி பதிவேடுகள், மதிப்பெண் பட்டியல் என பல ஆவணங்களை தயார் செய்வது, பராமரிப்பது போன்ற பணிகளையும் செய்ய வேண்டியுள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் வீட்டிற்கு சென்றும் ஆவணங்களை பராமரித்தல் போன்ற பணிகளை செய்வதால் பணி சுமை அதிகமாக இருப்பதாக சமீபத்தில் ஒரு ஆசிரியர் அழுத வீடியோ வைரலானது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை புதிய செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கல்வித்துறையில் பல பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 81 வகை ஆவணங்களை அதுவும் இணையதளம் வாயிலாக மட்டுமே பராமரித்தால் போதும் என்றும், தேவையற்ற ஆவண வகைகள் நீக்கப்பட உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் கூடுதல் பணிசுமை குறையும் என ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.