செவ்வாய், 10 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

மச்சினிச்சியை உயிருடன் புதைத்து கொலை செய்த நபர்.. கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்..!

மச்சினிச்சியை உயிருடன் புதைத்து கொலை செய்த நபர்.. கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்..!
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மச்சினிச்சியையே உயிருடன் புதைத்து கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கட்டிட மேஸ்திரியான அனுமந்தன் என்பவருக்கும், அவரது மனைவியின் தங்கை ராஜேஸ்வரிக்கும் இடையே நீண்ட நாட்களாக முறையற்ற தொடர்பு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு ராஜேஸ்வரியை வரவழைத்த அனுமந்தன், அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் தலையில் கல்லை போட்டு தாக்கியுள்ளார்.
 
ராஜேஸ்வரி மயக்கமடைந்ததும் அவர் இறந்துவிட்டதாக கருதிய அனுமந்தன், கொலையை மறைக்க திட்டமிட்டார். அருகிலிருந்த பள்ளத்தில் அவரை தள்ளிவிட்டு, டிராக்டரில் இருந்த மண்ணை கொட்டி உயிருடன் புதைத்துள்ளார். 
 
இதனை தூரத்திலிருந்து கவனித்த விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், போலீசார் ஜேசிபி உதவியுடன் சடலத்தை மீட்டனர். தலைமறைவாக இருந்த அனுமந்தனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையற்ற உறவால் ஏற்பட்ட இந்த விபரீத கொலை தருமபுரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva