திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 28 அக்டோபர் 2021 (17:21 IST)

ஆசிரியர்கள் சொத்து கணக்கை காட்ட வேண்டும்! – பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொத்து கணக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசின் முழு பராமரிப்பில் அரசு பள்ளிகள் செயல்படுவதுபோல, அரசின் உதவி பெறும் தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இதில் பல ஆயிரம் ஆசிரியர்களும், பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் ஆகிய அனைவரும் தங்களது சொத்து கணக்கு விவரம் மற்றும் கடன் விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டுமென தற்போது தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.