ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (09:46 IST)

வினாத்தாள் லீக் ஆவதை தடுக்க புதிய ஐடியா! – கல்வித்துறை போட்ட ப்ளான்!

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற தொடங்கியுள்ள நிலையில் வினாத்தாள்கள் லீக் ஆவதை தடுக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏப்ரலில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வு சமயத்தில் வினாத்தாள்கள் லீக் ஆவது கடந்த சில காலமாக தொடர் சர்ச்சையாகி வருகிறது. இந்த முறை வினாத்தாள்கள் லீக் ஆகாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வினாத்தாள்களை தேர்வு அன்று ப்ரிண்ட் எடுத்துக் கொள்ளும் வகையில் பள்ளிகளிலேயே பிரிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சோதனை முறையில் சென்னை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. 9 பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களை வெளி இடங்களில் ப்ரிண்ட் எடுப்பதால் வினாத்தாள் லீக் ஆகும் நிலையில் அதை தடுக்க இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K