தொடர்புடைய செய்திகள்
- பல்லடம் 4 பேர் கொலை: உடல்களை வாங்க உறவினர்கள் ஒப்புதல்..!
- பல்லடம் 4 பேர் கொலை.. செல்லமுத்துவை அடுத்து சோனைமுத்து கைது..!
- உதயநிதி தலைக்கு விலை..! வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
- பல்லடம் கொலை வழக்கில் கைதானவரின் கால் முறிந்தது.. என்ன நடந்தது?
- குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடல்களை பெற மாட்டோம்.. பல்லடம் அருகே பரபரப்பு..!
பல்லடம் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி.. துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்..!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது மூன்றாவது மற்றும் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் என்பவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் என்பவரை போலீசார் துரத்தி சென்ற போது வெங்கடேஷ் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகவும் இதனை அடுத்து போலீசார் துப்பாக்கியில் சுட்டு பிடித்ததாகவும் கூறப்படுகிறது
கொலைக்கு பயன்படுத்தி ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் வெங்கடேஷ் காலில் மூன்று முறை சுட்டதாகவும் இதனை அடுத்து காலில் காயமடைந்த வெங்கடேஷ் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கியால் சுட்டபோது வெங்கடேஷ் கீழே விழுந்ததால் இரண்டு கால்களும் முறிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
