1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (17:09 IST)

பல்லடம் படுகொலை: FIR-ல் பரபரப்பு தகவல்கள்

palladam
திருப்பூர்  மாவட்டம் பல்லடம் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இந்தக் கொலைக்கு முன்விரோதம் காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர்  மாவட்டம் பல்லடம் என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, அந்த பகுதியில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து இணையதளத்தில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இந்தக் கொலைக்கு முன்விரோதம் காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் பல்லடம் சாலையில் உணவகம் நடத்தி வந்திருக்கிறார். இந்த உணவகம் எதிரில்  வெங்கடேஷ் கோழிக்கடை நடத்தி வந்துள்ளார்.

இந்த  நிலையில்,  உணவகத்தில் இருந்து சிலிண்டர் மற்றும் கோழிக்கூண்டுகளை  வெங்கடேஷ் எடுத்துச் சென்றதால் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.