வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 1 ஜூலை 2023 (14:54 IST)

“நான் ஹர்திக் பாண்ட்யா பக்கத்தில் கூட இல்லை…” உண்மையை ஒத்துக்கொண்ட ஆல்ரவுண்டர்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யா சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடாமல் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கடந்த சில மாதங்களாக டி 20 அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு டி 20 அணியில் இப்போது இடமளிக்கப்படுவதில்லை. அதனால் அவர் அறிவிக்கப்படாத டி 20 நிரந்தர கேப்டனாகியுள்ளார். மேலும் விரைவில் அவர்தான் ஒருநாள் அணிக்கான கேப்டனாகவும் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை பற்றி பேசியுள்ள மற்றொரு ஆல்ரவுண்டர் வீரரான வெங்கடேஷ் ஐயர் “ஹர்திக் பாண்ட்யா மிகவும் திறமையானவர். நான் என்னுடைய இடத்தை இந்திய அணியில் உறுதி செய்யவேண்டுமென்றால், நான் அவரை போலவே திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் நான் இப்போது அவரின் பக்கத்தில் கூட இல்லை. இதுதான் உண்மை. ஆனால் நான் அதை நோக்கி கடினமாக உழைத்து வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.