1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. palanisamy going high in edappaadi place

2026 தேர்தல் ரிசல்ட்!. 2ம் இடத்திற்கு வந்த அதிமுக!.. எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை!...

eps
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கிது. அதில், இதுவரை வெளியாகியுள்ள 179 தொகுதிகளுக்கான முடிவில் தவெக முன்னிலை வகித்து வருகிறது. தற்போதுள்ள நிலவரப்படி தவெக 79 தொகுதிகளிலும், அதிமுக 57 தொகுதிகளிலும், திமுக 43 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.

இதில், திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் 800 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேநேரம், தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.

கடந்த பல வருடங்களாகவே தபால் வாக்குகளை திமுக மட்டுமே முதலிடத்தில் இருந்தது. ஆனால் இந்த முறை தவெக முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதிமுக இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. திமுக 3ம் இடத்திற்கு சென்றுவிட்டது.
அடுத்த கட்டுரையில்
பெரம்பூர், திருச்சி கிழக்கு 2 தொகுதிகளிலும் விஜய் முன்னிலை!.. தவெகவினர் மகிழ்ச்சி!...