1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 ஜூன் 2023 (13:11 IST)

பழனி முருகன் கோயில் சுற்றுலா தலம் அல்ல. அது இந்துக்களின் வழிபாட்டு தலம்: எச் ராஜா

H Raja
பழனி முருகன் கோயில் சுற்றுலா தலம் அல்ல. அது இந்துக்களின் வழிபாட்டு தலம் என பாஜக பிரமுகர் எச் ராஜா தெரிவித்துள்ளார். 
 
 பழனி முருகன் கோவில் உள்பட முக்கிய இந்து கோயில்களில் இந்துக்கள் தவறாக வேறு மதத்தினர் நுழையக்கூடாது என்ற பெயர் பலகை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. 
 
ஆனால் பழனி முருகன் கோவிலில் இந்த பெயர் பலகை அகற்றப்பட்டதால் இந்துக்கள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தியதை அடுத்து மீண்டும் அந்த பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பாஜக பிரமுகர் ஹச் ராஜா கூறியிருப்பதாவது”
 
பழனி முருகன் கோயில் இந்துக்களின் வழிபாட்டு தலமாகும். இது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல. கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம்கள் கோயிலுக்குள் செல்ல எத்தனிக்கிறார்கள். உடனே அறநிலையத்துறை இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையைவைத்து பின் மிரட்டலுக்கு பயந்து அகற்றியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
 
இது போன்ற அறிவிப்பு பலகை எல்லா கோவில்களிலும் வழக்கமான ஒன்றுதான். பழனியை போர்க்களமாக்க முயற்சிக்கும் சேகர் பாபுவின் இத்திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva