ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (11:20 IST)

இந்துக்கள் அனைவரும் வாள், துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்: உத்தரப்பிரதேச துறவி

இந்துக்கள் அனைவரும் வாள் அல்லது துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்றும் வாள், துப்பாக்கி வைத்திருக்காத இந்துக்களுக்கு உதை வழங்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச துறவி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கிருஷ்ணன் பிறந்த பூமி ஆன மதுராவில் உத்தரப்பிரதேசச் சேர்ந்த துறவி யுவராஜ் மகாராஜ் என்பவர் சமீபத்து பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
அதில் இந்துக்கள் அனைவரும் தங்களுடைய பாதுகாப்பிற்காக வாள், துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்றும் இதை வைத்திருக்காதவர்களை நான் ஒரு இந்துவாகவே கருத மாட்டேன் என்றும் அவர்களை நான் உதைக்க போகிறேன் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் வாள்,  துப்பாக்கி தேவைப்படுவோர் தன்னிடம் பேசும் விலைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்றும் இதன் விலை 1250 என்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran