ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (20:00 IST)

சத்தீஸ்கர் மாநிலத்திலும் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும்- காங்கிரஸ் எம்பி.,

sylinder
ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்திலும்  500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன் அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவர் காங்கிரஸ் தொண்டர்களை சந்திக்கும்போது பல கூட்டங்களில் உரையாற்றி வருகிறார்.

அவரது நிகழ்ச்சி இன்று ஸ்டீல் சிட்டியில் நடைபெற்றது. அப்போது அவர்  பேசும்போது, சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஸ் பாகல் தலைமையிலான ஆட்சியைப் பாராட்டினார்.

ராஜஸ்தான் மாநிலத்தைப் போன்று சத்தீஸ்கரிலும் இல்லத்தரசிகளுக்கு ரூ.500 க்கு விலிண்டர் வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும், மோடி அரசு இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே மோதல் உண்டாக்குகிறது.  நாடு முழுவதும் வெறுப்பை பரப்பும் பணியை மோடி அரசு செய்து வருகிறது என்று விமர்சித்தார்.

மேலும், காங்கிரஸ் அரசு மானியம் வழங்கியபோதெல்லாம் மத்திய அரசு பொதுமக்களுக்கு சிலிண்டரில் மானியம் வழங்கவில்லை. சத்தீஸ்கரில் சிலிண்டர் ரூ.500 விலையில் கிடக்க வழி செய்யப்படும் என்று கூறினார்.