இப்படிதான் இறுதி நிகழ்வுக்கு செல்வீர்களா? ஷாருக்கானை கேள்வி கேட்கும் ரசிக்ர்கள்!
ஷாருக் கான் மறைந்த நடிகர் திலிப் குமாரின் இறுதி நிகழ்வுக்கு வந்தது சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் சில தினங்களுக்கு முன்னால் காலமானார். அவருக்கு வயது 98. அவரது இறப்புக்கு ஒட்டு மொத்த சினிமாத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வரும்நிலையில் சூப்பர் ஸ்டார் அவரது மனைவியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
அந்த வகையில் நடிகர் ஷாருக்கானும் அந்த இறுதி மரியாதை நிகழ்ச்சிக்கு சென்றார். ஆனால் அப்போது அவர் சன் கிளாஸ், மற்றும் இறுக்கமான பேன்சி ஆடை என அணிந்து சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாக, இப்படிதான் ஒரு இறுதி நிகழ்வுக்கு செல்வார்களா என்று ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.