திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (17:20 IST)

’’ரஜினி ஒரு தார்மீக சக்தி …அதைப் பலமுறை நினைப்பேன்’’ – ப சிதம்பரம் நெகிழ்ச்சி

நடிகர் ரஜினி நேற்று தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ரஜினி குறித்துக் கூறியுள்ளதாவது :

2021ஆண்டையும் அதற்குப் பிறகு 2024ஆம் ஆண்டையும் நான் எதிர் நோக்குகிறேன். அவற்றில் திரு ரஜினிகாந்த் அவர்களுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல் திரு ரஜினிகாந்த் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்க!

திரு ரஜினிகாந்த் அவர்கள் ஒரு தார்மீக சக்தியாக விளங்கியவர், விளங்குபவர், விளங்குவார் என்பதில் எனக்கு ஐயமில்லை 1996ஆம் ஆண்டைப் பல முறை நினைத்துப் பார்த்து நான் மகிழ்ச்சியடைபவன்.

என்னுடைய இனிய நண்பர் திரு ரஜினிகாந்த் அவர்கள் நேற்று அறிவித்த முடிவினை அவருடைய நலம்விரும்பி என்ற முறையில் நான் வரவேற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.