1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (15:51 IST)

ப.சிதம்பரம், ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன்; கமல் பதிவு முட்டாள்தனமானது!" - ஹெச்.ராஜா

ப.சிதம்பரம், ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன்; கமல் பதிவு முட்டாள்தனமானது!
அரசியலுக்காக மக்கள தூண்டும் விதமாகப் பேசும் . ப. சிதம்பரம் ஸ்டாலினை வன்மையாகக் கண்டிக்கிறேன் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்த நிலையில், காவல்துறை அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டது. கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் அரசை விமர்சித்து வந்த நிலையில், ஹெச். ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

இன்று காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, அரசியலுக்காக மக்களைத் தூண்டும் விதமாக பேசிவரும் ப. சிதம்பரம், ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன்.  மேலும், இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார அமைப்பு நிறுவனம் பாரட்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ஒரு பதிவு குறித்து பேசிய ஹெச்.ராஜா அது முட்டாள்தனமானது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.