பயப்படதீங்க இன்னும் 2 -3 நாள் தான்... தைரியம் சொல்லும் ஈபிஎஸ்!!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் பேசியது பின்வருமாறு, கொரோனா நோய் தடுப்பு பணிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மத்திய அரசு ஊரடங்கை அறிவிக்கும் முன்னரே தமிழக அரசு அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு ஊரடங்கை நீட்டித்துவிட்டது.
அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும்.
ஊரடங்கால் தமிழகத்தில் காய்கறிகள் விலை உயர்ந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு. ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக்டன் கொள்முதல் செய்து விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.