செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (15:33 IST)

எடப்பாடியார் ஆன் ஃபயர்: பிரஸ் மீட்டில் தெறி!!

சற்று முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர் என பேசியுள்ளார். 
 
செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா நோய் தடுப்பு பணிக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மத்திய அரசு ஊரடங்கை அறிவிக்கும் முன்னரே தமிழக அரசு அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு ஊரடங்கை நீட்டித்துவிட்டது. 
 
அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் என தெரிவித்தார். 
 
இதோடு, வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை நாட்டிற்குள் இறக்குமதி செய்துள்ளனர். ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என பேசினார். எடப்பாடி பழனிச்சாமி இது போன்ற பேச்சு வழக்கத்துக்கு மாறான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 
 
அதேபோல ஏழை, எளிய மக்களில் வாழ்வாதாரத்தையும் கணக்கில் கொண்டு அவர்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.