1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (13:30 IST)

2021ல் என்ன அதிசயம் நடக்கும்? ரஜினிக்கு ப.சிதம்பரம் கேள்வி

சமீபத்தில் நடைபெற்ற கமல்ஹாசன் 60 என்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசிய போது 2021 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் ’அதிசயம்-அற்புதம்’ நடக்கும் என்றும் அந்த அதிசயம் அற்புதத்தை பொதுமக்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்
 
ரஜினி கூறிய அதிசயம் அற்புதம் என்ற இரண்டே இரண்டு வார்த்தை மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. முதல்வர் பழனிசாமி முதல் கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் இதற்கு பதில் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இது நாள் வரை டெல்லி திகார் சிறையில் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அவர் ரஜினியின் அதிசயம் அற்புதம் குறித்து கருத்து கூறிய போது ’20210இல் என்ன அதிசயம் என்ன அற்புதம் நடக்கும் என்பதை ரஜினி தான் கூற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்
 
இதே ப சிதம்பரம் அவர்களை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டி கட்டிய ஒருவர் தான் பிரதமராக வேண்டும் என்று ரஜினி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது