எந்த நாட்டிற்கு நல்லதல்ல: ராகவா லாரன்ஸ் பேச்சுக்கு சீமான் பதிலடி

Last Modified ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (10:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை ஒரு சில இடங்களில் மறைமுகமாகவும் சில இடங்களிலும் நேரடியாகவும் தாக்கி பேசினார்

சீமான் பேச்சு நாட்டிற்கு நல்லதல்ல என்று ராகவா லாரன்ஸ் பேசிய நிலையில் இந்த வயதில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டியதன் அவசியம் என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

ரஜினிகாந்த் புகழுக்காகவும் பணத்துக்காகவும் பப்ளிசிட்டிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை என்றும், அவரை வைத்துதான் மற்றவர்கள் பப்ளிசிட்டி செய்து வருவதாகவும் அவர் சீமானை மறைமுகமாக குறிப்பிட்டார்

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ்ஸின் இந்த பேச்சுக்கு இன்று சீமான் பதிலடி கொடுத்துள்ளார். தம்பி ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என்று தெரியவில்லை. நான் என் நாட்டிற்காக பேசி வருகிறேன் என்று கூறியுள்ளார். சீமானின் இந்த பேச்சுக்கு ராகவாலாரன்ஸ் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :