1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 மே 2021 (08:22 IST)

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி துவக்கம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கியுள்ளது. 

 
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிப்பு மையத்தை மட்டும் அவசர நிலை கருதி திறக்க வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
 
இதனை ஏற்று ஆக்சிசன் உற்பத்தி மேற்கொள்ள 4 மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழ அரசு அனுமதி கொடுத்தது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தொடங்குகிறது. இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி துவங்கியுள்ளது.