வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 மே 2021 (13:19 IST)

தமிழகத்திற்கு உதவிய நெதர்லாந்து! – விமானத்தில் வந்த ஆக்ஸிஜன்!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள நிலையில் நெதர்லாந்திலிருந்து ஆக்ஸிஜன் விமானத்தில் வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ளது பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய மாநில அரசுகள் வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜனை தருவித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.

அதன்படி தமிழகம் நெதர்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஆக்ஸிஜனை தருவித்துக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. அதன்படி நெதர்லாந்திலிருந்து தமிழகத்திற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விமானம் மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை வந்தடைந்த ஆக்ஸிஜன் 20 மெட்ரிக் டன் அளவு கொண்டது என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.