1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 23 ஜூன் 2019 (11:56 IST)

இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன்! ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்

தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் நடத்திய கருத்தரங்கில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் “சும்மா சும்மா மரத்தை வெட்டினேன்னு கேக்குறாங்க. ஏன்டா நாய்களா இன்னும் அசிங்கமா திட்டணுமா?” என ஆவேசமாக திட்டி பேசியுள்ளார்.

தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் நடத்திய “வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்” என்னும் கருத்தரங்கு சென்னை அடையாறில் நேற்று நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கல்ந்து கொண்டு பேசினார். அப்போது அவர் “பத்திரிக்கையாளர்கள் நான் மரம் வெட்டியதை பற்றியே தொடர்ந்து கேட்கிறார்கள். கல்கத்தாவில் இருந்து வருவது டெலிகிராப் பத்திரிக்கை. அதன் நிருபர் கேட்கிறான் ”சார் நீங்க மரம் வெட்டுனீங்களே ஏன்?” என்று. நான் இதற்கு 100 முறையாவது பதில் சொல்லியிருப்பேன். மறுபடி மறுபடி ஏன் அதையே கேட்கிறீர்கள் என்றேன்.

அதற்கு ஒருவன் “101வது தடவையாக பதில் சொல்லுங்களேன்” என கிண்டல் செய்கிறான். ”ஏன்டா நாய்களா இதை விட கேவலமா திட்டணுமா? ராமதாஸ் மரம் வெட்டினான்னு தெரியாத மக்களுக்கும் தெரியணும் அதுக்குதானே அதையே கேக்கறீங்க. இனிமேல் மரத்தை வெட்ட மாட்டேன். மரத்தை வெட்டுனியா?னு கேட்பவனை தான் வெட்டுவேன்” என்று பதில் சொன்னேன்” என பேசினார்.

மேலும் அவர் “மரத்தை வெட்டினேன்னு சொல்றவனெல்லாம் என் வீட்டுக்கு வந்து பாருங்கடா எவ்வளவு மரம் வளர்த்து வெச்சிருக்கேன்னு தெரியும்” எனவும் பேசியுள்ளார்.
பத்திரிக்கையாளர்கள் குறித்து ஒருமையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் ராமதாஸ் பேசியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.